sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கணும்!

 பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கணும்!

 பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கணும்!


ADDED : டிச 26, 2025 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 26, 2025 06:39 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை சுற்றுலா பயணியர் தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களில் வனவிலங்குகள் அதிகம் உள்ளன. இங்குள்ள வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில், இயற்கைக்கும், வனவிலங்குகளுக்கும்கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுற்றுலா பயணியர் அதிகளவில் வரும் நிலையில், பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆழியாறிலிருந்து மலைப்பாதையில் வால்பாறை வருவோர், உணவுப்பொருட்களோடு பிளாஸ்டிக் பைகளை வனப்பகுதியில் வீசுகின்றனர். இதனால், சுற்றுச்சூழலும், வனவிலங்குகளும் பாதிக்கின்றன.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

வால்பாறைக்கு வருவதற்கு இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆழியாறு மற்றும் சோலையாறு ஆகிய வனத்துறை சோதனை சாவடிகளில், சுற்றுலா பயணியர் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

ஆனாலும், வால்பாறை நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் பொருட்கள் வழங்குகின்றனர். இதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கைக்கும், வன விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை சுற்றுலா பயணியர் தவிர்க்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us