ADDED : மார் 08, 2026 05:27 AM

கோவை: இந்திய அறிவியல் கண்காணிப்பு கழகம் சார்பில், அறிவியல் அறிஞர்கள், ஆய்வாளர்களுக்கான, ஜே.சி. போஸ் நினைவு விருது வழங்கும் விழா நேற்று, நஞ்சுண்டாபுரம் ரோடு, பார்சன் சேஷ் நெஸ்டில் குடியிருப்பு அரங்கில்நடந்தது.
வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தர் கீதாலட்சுமி பேசுகையில், ''வேளாண்துறையில் மகசூலை அதிகரிப்பதற்கான பல்வேறு தொழில்நுட்பங்கள் நம் கையில் உள்ளன. உற்பத்தியை அதிகரித்து சாதித்து காட்டியுள்ளோம். ஆனால், பயிர் விளைவதற்கு அடிப்படை தேவையான நீராதாரம் தான் போதிய அளவில் இல்லை. மழைநீரை இன்னும் ஆக்கப்பூர்வமான வழிகளில் சேமிப்பது, நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பது அவசியம்,'' என்றார்.
விழாவில், வேளாண் விஞ்ஞானி ராமசாமி, திருச்செங்கோடு, கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்களின் திட்ட இயக்குனர் பேராசிரியர் மோகன், பாரதியார் பல்கலை பதிவாளர் ராஜவேல், அமெரிக்கா, பாஸ்டன் கல்லுாரி முன்னாள் பேராசிரியர் பிரான்சிஸ் சேவியர், அறிவியல் அறிஞர் விஜயக்குமார், திருச்சி தேசிய கல்லுாரி துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி, வரலாற்று ஆய்வாளர் சீதாராமன், பாரதியார் பல்கலை உடற்கல்வி துறை இயக்குனர் அன்பழகன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
விழாவை, இந்திய அறிவியல் கண்காணிப்பு கழக இயக்குனர் ராஜன் ஒருங்கிணைத்தார்.
