ADDED : ஏப் 07, 2025 09:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில், நால்ரோடு அருகே, ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது.
இக்கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் சுகுணா தலைமை வகித்து, வரவேற்றார். மேட்டுப்பாளையம் அனைத்து ஹிந்து சமுதாய நந்தவனத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் சுகுமார், டாக்டர் அரவிந்த் கார்த்திகேயன் ஆகியோர், தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், கல்லூரிக்கு,100 சதவீதம் வருகை புரிந்தவர்களுக்கும், சிறந்த சாதனையாளர் விருதை வழங்கி பேசினர்.
விழாவில் மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பங்கேற்றனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.