/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.எம்.சி.எச்.,சி.இ.ஓ.,க்கு விருது
/
கே.எம்.சி.எச்.,சி.இ.ஓ.,க்கு விருது
ADDED : ஜூலை 09, 2025 10:45 PM

கோவை; பிளக்ஸ் ஈவென்ட்ஸ் எனும் சர்வதேச அமைப்பு, தங்கள் துறைகளில் தனிச்சிறப்பான அர்ப்பணிப்பு, புதுமை மற்றும் தலைமைத் திறனை வெளிப்படுத்தும், ஆளுமைகளை அங்கீகரித்து வருகிறது.
நடப்பாண்டு, 70க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. தொடர்ந்து, ஹாங்காகில் நடந்த விழாவில், கே.எம்.சி.எச்., மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி டாக்டர் சிவகுமாரனுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதைப் பெற்ற, இரண்டாவது இந்தியர் இவர். பார்ச்சுனா உலகளாவிய சிறப்பு விருதையும் அவர் பெற்றுள்ளார்.
இந்த கவுரவத்தைப் பெற்ற முதல் மற்றும் ஒரே இந்திய முதன்மை செயல் அதிகாரியும் ஆவார்.
கே.எம்.சி.எச்., தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி, செயல் இயக்குனர் அருண் பழனிசாமி ஆகியோர் டாக்டர் சிவகுமாரனை வாழ்த்தினர்.