/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொங்கு நாடு அறக்கட்டளை சார்பில் விருது வழங்கல்
/
கொங்கு நாடு அறக்கட்டளை சார்பில் விருது வழங்கல்
ADDED : ஜன 05, 2026 05:31 AM

பொள்ளாச்சி: சென்னை கொங்கு நாடு அறக்கட்டளை சார்பில், 36ம் ஆண்டு விழாவையொட்டி, சான்றோர்களுக்கு விருது, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பொள்ளாச்சி தனியார் மண்டபத்தில் நடந்தது.
சக்தி குழுமத்தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். சேலம் திரிவேணி குழுமம் மேலாண்மை இயக்குனர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். கொங்கு நாடு அறக்கட்டளை தலைவர் அப்பாவு, செயலாளர் அரவிந்தன், பொருளாளர் செல்வக்குமார் வரவேற்றனர்.
தொடர்ந்து நடந்த விருது வழங்கும் விழாவில், அருட்செல்வர் விருது, கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், ஆன்மிகத்துக்காக மேல் மருவத்துார் ஆதிபராசக்தி பீடம் அறங்காவலர் சக்தி அன்பழகனுக்கும் வழங்கப்பட்டது.
வள்ளிக்கும்மி ஆசிரியர் சிவக்குமாருக்கு தீரன் சின்னமலை விருதும்; உலக சமுதாய சேவா சங்கம் துணைத்தலைவர் சின்னசாமி மற்றும் குழந்தை நல டாக்டர் உத்தரராஜ்க்கு கொங்குவேள் விருதும் வழங்கப்பட்டது.
விவசாயி விக்ரம் முத்துரத்தினசபரி, தொழிலதிபர் சித்தார்த்துக்கு காளிங்கராயர் விருதும்; தொழில்துறைக்கான டாக்டர் சுப்புராயன் விருது, தொழிலதிபர் பழனிசாமிக்கு வழங்கப்பட்டது.
தொழிலதிபர் கோமதி, சமூக சேவகர் கல்கி சுப்பிரமணியத்துக்கு கே.பி. சுந்தராம்பாள் விருதும்; சமூக சேவைக்காக செந்தாமரைக்கு பாரத ரத்னா சி.சுப்ரமணியம் விருதும்; தேசிய சதுரங்க சாம்பியன் கிராண்ட் மாஸ்டர் இனியனுக்கு இளம் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.
விழா ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தன், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகையும், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். பொள்ளாச்சி காரள வம்சம் கலைச்சங்கத்தின் ஆடல் தவம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது.

