/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோலையாறு அணையில் புனரமைப்பு பணி ரூ.30 கோடியில் நடக்கிறது
/
சோலையாறு அணையில் புனரமைப்பு பணி ரூ.30 கோடியில் நடக்கிறது
சோலையாறு அணையில் புனரமைப்பு பணி ரூ.30 கோடியில் நடக்கிறது
சோலையாறு அணையில் புனரமைப்பு பணி ரூ.30 கோடியில் நடக்கிறது
ADDED : ஜன 05, 2026 05:33 AM

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில், ஆண்டு தோறும் பெய்து வரும் பருவ மழையை தேக்கி வைத்து, குடிநீர் மற்றும் பாசன விவசாயத்திற்காக பயன்படுத்தும் வகையில், பரம்பிக்குளம் பாசன திட்டத்தின் கீழ் அணைகள் கட்டப்பட்டன.
ஆண்டு தோறும் பருவ மழை பெய்யும் போது, மேல்நீராறு அணை, கீழ்நீராறு அணைகளின் தேக்கி வைக்கப்படும் மழைநீர், டனல் வழியாக சோலையாறு அணைக்கு திறந்து விடப்படுகிறது.
160 அடி உயரமுள்ள இந்த அணை நிரம்பியதும், சேடல்டேம் வழியாக பரம்பிக்குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சோலையாறு அணையில் நீர்கசிவு ஏற்பட்டுள்ள நிலையில், மூன்று மதகுகளில், ஒரு மதகு பழுதடைந்த நிலையில் இருப்பதும் கண்டறியப்பட்டது.
அணையின் பாதுகாப்பு குறித்து, உலக வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து,30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை புனரமைப்பு செய்ய முடிவு செய்து, அதற்கான நிதியை உலக வங்கி அதிகாரிகள் கடந்த ஆண்டு ஒதுக்கினர்.
இது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
உலக வங்கி நிதியுதவியுடன், சோலையாறு அணையில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணி நடக்கிறது. குறிப்பாக, ஷட்டர்கள் மாற்றியமைக்கப்படவுள்ளன. அதே போல், அணையில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை தடுக்கும் வகையில், பணிகள் தீவிரமாக நடக்கிறது. தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளதால் இந்த பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு பருவ மழை துவங்குவதற்கு (மே மாதத்திற்கு முன்) முன்னதாக அணை புனரமைக்கும் பணி முற்றிலுமாக நிறைவடைந்துவிடும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

