/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடை டாக்டருக்கு விருது வழங்கல்
/
கால்நடை டாக்டருக்கு விருது வழங்கல்
ADDED : செப் 30, 2024 11:10 PM
பொள்ளாச்சி: கோவையில், தி.மு.க.,வின், 75வது பவள விழா நடந்தது. இதில், மேற்கு மண்டல திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில், சிறந்த தன்னார்வ அமைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டது.
குறிப்பாக, கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய தன்னார்வ அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
அதில், பொள்ளாச்சியில், கால்நடைத்துறை டாக்டர் அசோகனுக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பில் சிறந்த முறையில் பணிபுரிந்தமைக்கு விருது வழங்கப்பட்டது.
தமிழக, குடியுரிமை பெறாத தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேயசிவசேனாபதி விருது வழங்க, அசோகன் பெற்றுக்கொண்டார்.