/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியரசு தினத்தில் ராணுவ வீரர்களுக்கு விருது
/
குடியரசு தினத்தில் ராணுவ வீரர்களுக்கு விருது
ADDED : ஜன 27, 2025 12:36 AM

கோவை; குடியரசு தினத்தை முன்னிட்டு ஏ.ஜே.கே., கலை, அறிவியல் கல்லுாரி மற்றும் கோவை லயன்ஸ் கிளப் கோல்டன் சிட்டி சார்பில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டது.கல்லுாரி செயலாளர் அஜித்குமார் லால் மோகன் விருதுகள் வழங்கி பேசுகையில்,''தேசத்துக்காக தங்களை அர்ப்பணித்து நாட்டின் எல்லையில், பணியாற்றும் ஒவ்வொரு ராணுவ வீரர்களையும் நாம் நினைக்க வேண்டும். தேசத்தில் சுதந்திர காற்று வீச, நாம் சுதந்திரமாக வாழ, சுதந்திர போராட்ட தியாகிகளின் அர்ப்பணிப்பே காரணம். ராணுவ வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும். நாட்டின் வரலாற்றை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.
பிரதமர் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மனோகரன் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விருதுகள், வழங்கப்பட்டன.

