/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீத்தடுப்பு ஒத்திகை குறித்து விழிப்புணர்வு
/
தீத்தடுப்பு ஒத்திகை குறித்து விழிப்புணர்வு
ADDED : பிப் 14, 2024 11:26 PM

பொள்ளாச்சி, -தீ விபத்தில் சிக்கினால் எவ்வாறு தப்பிப்பது, மற்றவர்களை பாதுகாப்பாக எப்படி மீட்பது என்பது குறித்து, தீயணைப்பு வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
நிறைவு நாளை முன்னிட்டு, நேற்று, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. ஆர்.டி.ஓ., நாகராஜ் தலைமை வகித்தார். முன்னாள் முதன்மை டிராபிக் வார்டன் கமலக்கண்ணன் பங்கேற்றார்.
தீயணைப்பு நிலைய அலுவலர் கணபதி மேற்பார்வையில், கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில், தீ விபத்து ஏற்பட்டால், எவ்வாறு மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என, தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம் அளித்தனர்.
குறிப்பாக, செயற்கையாக, தீயை உருவாக்கி, அதை பாதுகாப்பாக அணைப்பது குறித்து பொதுமக்களுக்கு செயல்முறை பயிற்சியும் அளித்தனர். தீ விபத்து நிகழ்ந்து, விபத்தில் சிக்கி இருப்போரை, தோளில் எப்படி சுமந்து வர வேண்டும் என்பது குறித்தும் தத்ரூபமாக செய்து காட்டப்பட்டது. தீயணைப்பு கருவிகளை இயக்கும் முறைகள் குறித்தும் விளக்கமளித்தனர்.

