ADDED : நவ 03, 2025 10:15 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் சில வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் வந்து செல்கின்றன. வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்கவும், பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்வதை தடுக்கவும் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிக்குமார் உத்தரவின் படி, தனியார் பள்ளியில் படிக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு கோத்தகிரி சாலையில் உள்ள மரக்கிடங்கில் வனம் மற்றும் வன விலங்குகளின் முக்கியத்துவம் குறித்தும், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், வனவர் சிங்காரவேலு தலைமையிலான வனத்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

