/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனித்துவ விவசாய அடையாள எண் பெறாதவர்கள் 8,611 பேர்
/
தனித்துவ விவசாய அடையாள எண் பெறாதவர்கள் 8,611 பேர்
ADDED : நவ 03, 2025 10:16 PM
மேட்டுப்பாளையம்:  கோவை மாவட்டத்தில் இதுவரை பதிவு பெற்ற விவசாயிகளில் 8,611 பேர் இன்னமும் விவசாய அடையாள எண் பதிவு பெறவில்லை.
கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளதாவது:-
தமிழகத்தில் 'பி.எம். கிசான் நிதி' திட்டமானது பிப்ரவரி 2019ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக நான்கு மாதத்திற்கு ஒருமுறை தலா ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூ.6,000  மூன்று தவணைகளில், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு, உதவித் தொகையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு,  பி.எம்.கிசான் பயனாளிகள் வரும் காலங்களில் தவணை தொகை பெற தனித்துவ விவசாய அடையாள எண் அவசியம் என உறுதியாக தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை பதிவு பெற்ற விவசாயிகளில் 8,611 பேர் இன்னமும் விவசாய அடையாள எண் பதிவு மேற்கொள்ளவில்லை. இவ்விவசாயிகள் உடனடியாக பதிவு மேற்கொண்டு, 21வது தவணையை தடையின்றி பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டோ அல்லது பொது சேவை மையத்தின் வாயிலாக தங்களது ஆதார் எண், சிட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுடன் சென்று உடனடியாக பதிவு செய்து, தனித்துவ விவசாய அடையாள எண் பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.--------

