/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இணைய பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
/
இணைய பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
ADDED : ஆக 12, 2025 07:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, செக்போர்க்டெக் நிறுவனம் சார்பில், இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாணவ, மாணவியருக்கு இன்றைய சூழலில் ஏற்படும் இணைய பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், இணைய மோசடி, கணினி ஊடுருவல், தரவுத்திருட்டு, மின்னணு பண மோசடி, இணையம் வழியாக மிரட்டுவது போன்றவை குறித்து விளக்கப்பட்டது. சைபர் பாதுகாப்பு கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் செக்போர்க்டெக் நிறுவனத்தின் நிறுவனர் தனராஜ் விளக்கினார். பள்ளி முதல்வர் பிரகாஷ் நன்றி கூறினார்.