/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடையில் மலேரியா குறித்து விழிப்புணர்வு
/
காரமடையில் மலேரியா குறித்து விழிப்புணர்வு
ADDED : ஏப் 25, 2025 11:15 PM
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் காரமடை வட்டாரத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நேற்று உலக மலேரியா தினத்தை முன்னிட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதுகுறித்து, காரமடை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் போரப்பன் கூறியதாவது:- இந்த ஆண்டு, உலக மலேரியா தினத்தின் கருப்பொருளாக 'மலேரியா எங்களுடன் முடிகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருப்பொருள் மலேரியா ஒழிப்பை விரைவுபடுத்த புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு, புதுமையான திட்டமிடல் மற்றும் குழுப்பணியின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
மலேரியா தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு மலேரியா காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு, தடுக்கும் முறை, ரத்த பரிசோதனை, சிகிச்சை முறைகள் பற்றி தெளிவாக எடுத்து கூறப்பட்டது, என்றார்.---