/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு
/
இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு
ADDED : அக் 19, 2025 09:08 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சுற்று வட்டார அரசு பள்ளி மாணவர்களுக்கு இயற்கை வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வேளாண் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில், 'அட்மா' திட்டத்தின் வாயிலாக, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள, நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்திற்கு, கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் இருந்து, 110 மாணவர்கள் ஒரு நாள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
இதில், நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் ராமசுப்ரமணியன் மாணவர்களுக்கு இயற்கை வேளாண்மை குறித்து விளக்கினார்.
தொடர்ந்து, மாணவர்கள் களப்பயணமாக பல்கலையில் உள்ள வயலுக்கு சென்று அங்கு இருந்த ஆராய்ச்சி திடல்களை பார்வையிட்டனர்.
அப்போது, ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் பூசப்பட்ட மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும், விவசாயத்திற்கு அங்கக வேளாண்மை இடுபொருட்களான பஞ்சகவ்வியம். மீன் அமிலம் தயாரிப்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை, அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் மேகலாதேவி செய்தார்.