/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடுத்த கட்ட முகாம் 28ம் தேதி துவக்கம்
/
அடுத்த கட்ட முகாம் 28ம் தேதி துவக்கம்
ADDED : அக் 19, 2025 09:08 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஒன்றியத்தில் அடுத்த கட்டமாக, 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்', வரும் 28ம் தேதி துவங்குகிறது.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' கடந்த இரண்டு மாதங்களாக நடக்கிறது. அடுத்த கட்ட முகாம்களுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 28ம் தேதி, சிறுகளந்தை ஊராட்சிக்கு, காட்டம்பட்டி சமுதாய நலக்கூடத்தில் முகாம் நடக்கிறது. நவம்பர் 4ம் தேதி, ஆண்டிபாளையம் ஊராட்சிக்கு கப்பளாங்கரையில் உள்ள சிவசக்தி திருமண மண்டபத்தில் முகாம் நடக்கிறது.
வரும், 6ம் தேதி, பெரியகளந்தை, மன்றாம்பாளையம், மெட்டுவாவி ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கு, பெரியகளந்தை மயில்சாமி திருமண மண்டபத்தில் முகாம் நடக்கிறது.
முகாமில், பல்வேறு அரசு துறை பங்கேற்பதால், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும், என, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

