மாசுபாடு, நீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
மாசுபாடு, நீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
ADDED : பிப் 25, 2026 05:47 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஜோதிநகர் சாந்தி பள்ளியின், குட்டி காவலர்கள் கிளப் சார்பில், மாசுபாடு மற்றும் நீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. செயலாளர் சாந்தகுமாரி முன்னிலை வகித்தார். இதில், மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்று, தண்ணீரை பாதுகாப்பதன் முக்கியத்துவம், மாசுபாட்டை குறைப்பதன் முக்கியத்துவம் குறித்து படங்கள் வாயிலாக தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தினர்.
பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வினியோகிக்கபட்ட தகவல் துண்டு பிரசுரங்களை உருவாக்க மாணவர்களின் கலைப்படைப்புகள் பயன்படுத்தப்பட்டன.
வன அதிகாரி ரஞ்சித் பேசுகையில், ''மாணவர்களின் இந்த முயற்சி நிச்சயமாக, சமூகத்தில் விளைவை உருவாக்கும்,'' என்றார். அதன்பின், அவர் கொடி அசைத்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். ஜோதிநகரில் குட்டி காவலர்கள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவர்களின் முயற்சியை பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி பாராட்டினார்.
