/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை பாதுகாப்பு விதிமுறைகள் முதலுதவி குறித்து விழிப்புணர்வு
/
சாலை பாதுகாப்பு விதிமுறைகள் முதலுதவி குறித்து விழிப்புணர்வு
சாலை பாதுகாப்பு விதிமுறைகள் முதலுதவி குறித்து விழிப்புணர்வு
சாலை பாதுகாப்பு விதிமுறைகள் முதலுதவி குறித்து விழிப்புணர்வு
ADDED : ஏப் 24, 2025 10:46 PM

பொள்ளாச்சி, ; தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் 'பர்ஸ்ட் ஹார்ட் பவுண்டேஷன் நெட்வொர்க்' அமைப்பினர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், சாலை பாதுகாப்பு மற்றும் முதலுதவி அளிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, பொள்ளாச்சி காந்தி சிலை அருகே நடந்தது.
தீயணைப்பு துறை அலுவலர் திருஞானசம்பந்தம், வட்டார போக்குவரத்து கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் பொள்ளாச்சி பயிற்சி மைய பொறுப்பாளர் சக்திகுமார், கிளை மேலாளர்கள், 'பர்ஸ்ட் ஹார்ட் பவுண்டேஷன் நெட்வொர்க்' அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மண்டல பகுதியை சேர்ந்த டிரைவர்கள், நடத்துனர்கள், தனியார் டிரைவர்கள், பொதுமக்களிடம் முதலுதவி சிகிச்சை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
மேலும், சாலை விபத்துகளை குறைப்பதற்கும், அவசர காலங்களில் மற்றவர்களுக்கு உதவக்கூடிய திறன்களை பெறுவதற்கும், பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
சாலை பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு தொடர்பான அவசர கால சூழ்நிலைகளை சித்தரிக்கும் வகையில் மாதிரி காட்சிகள் நடத்தப்பட்டன.