/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னை டானிக் பயன்பாடு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
/
தென்னை டானிக் பயன்பாடு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
தென்னை டானிக் பயன்பாடு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
தென்னை டானிக் பயன்பாடு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
ADDED : ஏப் 29, 2025 09:24 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவியர், தென்னை டானிக் பயன்பாடு குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தென்குமாரபாளையத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, 30 விவசாயிகளை நேரடியாக சந்தித்தனர்.
மாணவியர் கூறியதாவது:
தென்னை டானிக், ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி ஊக்கியாக பயன்படுகிறது. பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில், தென்னையில் எதிர்ப்பு திறனை அதிகரிக்கச் செய்கிறது.
மேலும், தென்னை மரங்களில் குரும்பை உதிர்வதை கட்டுப்படுத்தி, 20 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெறவும் உதவுகிறது. ஆறு மாத இடைவெளியில், ஒரு மரத்திற்கு, 200 மில்லி என்ற அளவில் தென்னை டானிக்கை வேர் வாயிலாக அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். மேலும், செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.