/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளை ஈ கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
/
வெள்ளை ஈ கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
வெள்ளை ஈ கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
வெள்ளை ஈ கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
ADDED : ஏப் 02, 2025 10:16 PM

பொள்ளாச்சி; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை இறுதியாண்டு இளநிலை வேளாண் மாணவர்கள், கிராம தங்கல் திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து, 65 நாட்கள் நடைபெறும் பயிற்சியில், விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்களில் பயிற்சி, விவசாய நிலங்களை நேரடியாக பார்வையிடுதல், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளித்தல், நோய் மற்றும் பூச்சி தாக்கம் குறித்த ஆய்வுகள், பல்கலையின் புதிய ரகங்களின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.
அவ்வகையில், கூளநாயக்கன்பட்டி விவசாயிகள் இடையே 'தென்னை டானிக்' பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது.
வேளாண் மாணவர்கள் கூறுகையில், 'அதிக அளவில் பயிரிடப்படும் தென்னை மரத்தில் நுண்ணுாட்டச்சத்து ஊக்கியாக, 'தென்னை டானிக்' பயனளிக்கிறது. இது குறித்தும், தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் மஞ்சள் நிற ஒட்டும் பொறி ஆகியவற்றிற்கு, செயல் விளக்கத்துடன் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது,' என்றனர்.

