/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குற்ற சம்பவங்களை தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
/
குற்ற சம்பவங்களை தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
குற்ற சம்பவங்களை தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
குற்ற சம்பவங்களை தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ADDED : மே 04, 2025 10:01 PM
நெகமம், ; பண்ணை வீடுகள் மற்றும் தோட்டம் சார்ந்த இடத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், என, எஸ்.பி., அறிவுறுத்தினார்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பண்ணை வீடுகளில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடக்கிறது. குறிப்பாக, பல்லடம் அருகே சமீபத்தில் தோட்டத்து வீட்டில் முதியோரை கொலை செய்து கொள்ளை நடந்தது. சில தினங்களுக்கு முன் ஈரோடு மாவட்டத்தில் முதிய தம்பதியை கொலை செய்து, கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
இது போன்ற குற்றங்களை தவிர்க்க, நெகமம் அருகே உள்ள சின்னேரிபாளையத்தில், கோவை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில், பண்ணை வீடுகள் மற்றும் தோட்டம் சார்ந்த இடத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க, கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் நாய் வளர்ப்பில் ஈடுபட வேண்டும். இத்துடன், திருட்டு சம்பவங்கள் நடைபெறாத வகையில், வீட்டின் முக்கிய பகுதியில் ஒலியெழுப்பும் அலாரம் பொருத்த வேண்டும்.
மேலும், விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்ற நபர்களிடம், 'காவலன்' மொபைல் செயலி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மொபைல் செயலியை மக்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து வைக்கும் படி எஸ்.பி., அறிவுறுத்தினார். விழிப்புணர்வு கூட்டத்தில் நெகமம் போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.