/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுப்பதிவை அதிகரிக்க வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு
/
ஓட்டுப்பதிவை அதிகரிக்க வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு
ஓட்டுப்பதிவை அதிகரிக்க வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு
ஓட்டுப்பதிவை அதிகரிக்க வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஜன 24, 2025 10:05 PM

வால்பாறை, ; தேர்தல் செயல்பாடுகள் குறித்து, வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோலப்போட்டி நடந்தது.
வால்பாறை தாலுகா அலுவலகத்தில், வருவாய்த்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி (இன்று) நடக்கிறது. இதனையடுத்து, வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கோலப்போட்டி நடந்தது.
போட்டியை வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் துவக்கி வைத்து பேசும் போது, 'வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்கள் இடம் பெற்றுள்ளதா என்பதை, ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று வாக்காளர்கள் சரிபார்க்க வேண்டும். 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டும். வாக்களிப்பது ஜனநாயக கடமை. ஓட்டுக்களை யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது,' என்றார்.
நிகழ்ச்சியில், வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், கிராம நிர்வாக அலுவலர் ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், 15வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, சுவர் ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும், மாணவர்களிடையே வாக்களிப்பதன் உரிமைகள் மற்றும் அவசியம் குறித்து பேசப்பட்டது. வீட்டில் உள்ள பெற்றோர்கள், பெரியவர்கள் என அனைவரும் வாக்களிக்க வலியுறுத்த வேண்டும், என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.