/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு குப்பைத்தொட்டி புதிய பஸ் ஸ்டாண்டில் விழிப்புணர்வு
/
பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு குப்பைத்தொட்டி புதிய பஸ் ஸ்டாண்டில் விழிப்புணர்வு
பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு குப்பைத்தொட்டி புதிய பஸ் ஸ்டாண்டில் விழிப்புணர்வு
பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு குப்பைத்தொட்டி புதிய பஸ் ஸ்டாண்டில் விழிப்புணர்வு
ADDED : செப் 05, 2025 09:36 PM

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், பிளாஸ்டிக் பாட்டில்களை தனியாக சேரிக்க குப்பைத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி, பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்ட் மார்க்கமாக, கேரள மாநிலம், தென் மற்றும் வட மாவட்டங்களுக்கு, அதிகப்படியான பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் ஸ்டாண்டில், எப்பொழுதும் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் மக்கள், தாகம் தீர்க்க குடிநீர், குளிர்பான பாட்டில்களை வாங்கி பருகுகின்றனர். அதன்பின், பிளாஸ்டிக் பாட்டில்களை அப்படியே வீசிச் செல்கின்றனர். மக்காத கழிவான பிளாஸ்டிக் கழிவுகளை வீசுவதால், வடிகாலில் அடைப்பும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக சேகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. நகராட்சி நிர்வாகம் வாயிலாக, பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்க தனியாக குப்பைத்தொட்டி வைக்க திட்டமிடப்பட்டது.
இதையடுத்து, பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்டில், பிளாஸ்டிக் பாட்டில்களை போட குப்பைத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களை குப்பை தொட்டியில் தனியாக போடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, நகராட்சி தலைவர் சியாமளா தலைமை வகித்தார். கமிஷனர் குமரன், துணை தலைவர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
அதில், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பிளாஸ்டிக் பாட்டில்களை வெளியே வீசாமல், குப்பை தொட்டியில் போட்டால், மறு சுழற்சி செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.