தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விழிப்புணர்வு! விழிப்புணர்வு!

விழிப்புணர்வு! விழிப்புணர்வு!

விழிப்புணர்வு! விழிப்புணர்வு!

ADDED : பிப் 02, 2024 10:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2024 10:54 PM

Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹெல்மெட் போடலீன்னா உறுதிமொழி

அணிந்து வந்ததால் கிடைத்தது ரோஜா

 ஹெல்மெட் போடாதவர்கள் உறுதிமொழி

அணிந்தவர்களுக்கு ரோஜா கொடுத்தனர்

-நமது நிருபர் குழு-

ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் ரோஜா கொடுத்து பாராட்டு தெரிவித்தனர். விதிமுறை மீறியவர்களை போலீசார் நிற்க வைத்து உறுதிமொழி எடுக்க வைத்தனர்.

கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பாளையம் போலீசார், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை பஸ் ஸ்டாண்ட் முன்பு நடத்தினர்.

ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தோருக்கும், சீட் பெல்ட் அணிந்து காரில் பயணித்தோருக்கும் ரோஜா கொடுத்து பாராட்டு தெரிவித்தனர்.

ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களையும், சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணித்தவர்களையும் பஸ் ஸ்டாண்டு முன்புறம் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு அழைத்து வந்து ஹெல்மெட் அணிவதன் அவசியத்தையும் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தையும் போலீசார் எடுத்து கூறி உறுதிமொழி எடுக்கச் செய்தனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீசார் பேசியதாவது: தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமான சாலை விபத்துக்கள் நடக்கின்றன. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இதில் இரு சக்கர வாகனங்களில் சென்று விபத்துக்கு உள்ளாகி இறப்போர் எண்ணிக்கை அதிகம். உயிரிழப்போர் தலைக்காயத்தால் அதிகளவில் இறக்கின்றனர். ஹெல்மெட் அணிவதால் உயிரிழப்பை தவிர்க்க முடியும்.

நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தின் போது வேகமாக முன்புற கண்ணாடி அல்லது முன்புற இருக்கையின் பின்பகுதியில் மோதி இறக்கின்றனர். சீட் பெல்ட் அணிவதன் மூலம் உயிரிழப்பை தவிர்க்க முடியும். வளைவுகளில் முந்தக் கூடாது. தேவையில்லாத இடத்தில் ஹை பீம் லைட்டுகளை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், எஸ்.ஐ.,கள், ரூட்ஸ் நிறுவனத்தினர், 'உயிர்' அமைப்பினர் பங்கேற்றனர்.

சூலுாரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவச விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

தமிழக நெடுஞ்சாலைத்துறையின் சூலுார் உட் கோட்டம் சார்பில், சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவச விழிப்புணர்வு பிரசாரம் சூலுாரில் நடந்தது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வழங்கினர்.

தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து, சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் மனுநீதி பேசியதாவது: இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்வோரும் தலைக்கவசம் அணிவது அவசியம். காரில் செல்வோர் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும். போதையில் வாகனங்களை இயக்குவதால், விபத்துகள் அதிகம் நடக்கின்றன. அதனால், குடித்துவிட்டு வாகனங்களை இயக்க கூடாது. அதேபோல், செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்க கூடாது. அதிக வேகத்தில் வாகனங்களை இயக்கி விபத்தில் சிக்கி கொள்ள கூடாது. சாலை விதிகளை மதித்து வாகனங்களை இயக்கினால், விபத்துகளில் இருந்து தப்பிக்கலாம்.

இவ்வாறு, அவர் பேசினார்.

நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் துவங்கிய பேரணி, ரயில்வே பீடர் ரோடு, மார்க்கெட் ரோடு, புது பஸ் ஸ்டாண்ட், திருச்சி ரோடு வழியாக சென்றது.

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. சாலை பாதுகாப்பு உதவி கோட்ட பொறியாளர் ஆனந்தவள்ளி, சூலுார் உட்கோட்ட உதவி பொறியாளர் பூங்கொடி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

கோவில்பாளையம், பிப். 3--

கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பாளையம் போலீசார், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை பஸ் ஸ்டாண்ட் முன்பு நடத்தினர். ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தோருக்கும், சீட் பெல்ட் அணிந்து காரில் பயணித்தோருக்கும் ரோஜா கொடுத்து பாராட்டு தெரிவித்தனர்.

ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களையும், சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணித்தவர்களையும் பஸ் ஸ்டாண்டு முன்புறம் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு அழைத்து வந்து ஹெல்மெட் அணிவதன் அவசியத்தையும் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தையும் போலீசார் எடுத்து கூறி உறுதிமொழி எடுக்கச் செய்தனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீசார் பேசியதாவது: தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமான சாலை விபத்துக்கள் நடக்கின்றன. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இதில் இரு சக்கர வாகனங்களில் சென்று விபத்துக்கு உள்ளாகி இறப்போர் எண்ணிக்கை அதிகம். உயிரிழப்போர் தலைக்காயத்தால் அதிகளவில் இறக்கின்றனர். ஹெல்மெட் அணிவதால் உயிரிழப்பை தவிர்க்க முடியும்.

நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தின் போது வேகமாக முன்புற கண்ணாடி அல்லது முன்புற இருக்கையின் பின்பகுதியில் மோதி இறக்கின்றனர். சீட் பெல்ட் அணிவதன் மூலம் உயிரிழப்பை தவிர்க்க முடியும். வளைவுகளில் முந்தக் கூடாது. தேவையில்லாத இடத்தில் ஹை பீம் லைட்டுகளை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், எஸ்.ஐ.,கள், ரூட்ஸ் நிறுவனத்தினர், 'உயிர்' அமைப்பினர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

      Dinamalar
      Follow us