/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயிலில் பெண் பயணிகளுக்கான விழிப்புணர்வு பிரசாரம் தீவிரம்
/
ரயிலில் பெண் பயணிகளுக்கான விழிப்புணர்வு பிரசாரம் தீவிரம்
ரயிலில் பெண் பயணிகளுக்கான விழிப்புணர்வு பிரசாரம் தீவிரம்
ரயிலில் பெண் பயணிகளுக்கான விழிப்புணர்வு பிரசாரம் தீவிரம்
ADDED : ஆக 03, 2025 09:23 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் பாசஞ்சர் ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகள் பாதுகாப்புடன் இருப்பது குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சமீப காலமாக ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளை குறிவைத்து, திருட்டு சம்பவங்கள், பாலியல் தொந்தரவுகள் நடந்து வருகின்றன.
இதற்கு முடிவு கட்ட ரயில்வே போலீசார் சார்பில், பெண் பயணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கோவை ரயில்வே இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையில் மேட்டுப்பாளையம் எஸ்.ஐ., மனோகரன், சாந்தி, மங்கையர்க்கரசி, வனக்குமார் மற்றும் சமூக ஆர்வலர் பமீலா உள்ளிட்டோர் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் பாசஞ்சர் ரயிலில் பயணம் செய்த பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், ஓடும் ரயிலில் தின்பண்டங்களை புதிய நபர்கள் யாராவது கொடுத்தால், அதை உண்ணக்கூடாது. உடைமைகளை எச்சரிக்கையாக, பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
பெண்கள் பெட்டியில் ஆண்கள் அத்துமீறி நுழைந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். உடன் பயணம் செய்யும் பயணிகளிடம் தேவையில்லாத தொடர்புகளை வைத்துக் கொள்ளக் கூடாது என்பது குறித்தான கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.