/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதன் முறை ஓட்டளிக்கும் வாக்காளர்கள்l கூடுதல் எண்ணிக்கைக்கு விழிப்புணர்வு
/
முதன் முறை ஓட்டளிக்கும் வாக்காளர்கள்l கூடுதல் எண்ணிக்கைக்கு விழிப்புணர்வு
முதன் முறை ஓட்டளிக்கும் வாக்காளர்கள்l கூடுதல் எண்ணிக்கைக்கு விழிப்புணர்வு
முதன் முறை ஓட்டளிக்கும் வாக்காளர்கள்l கூடுதல் எண்ணிக்கைக்கு விழிப்புணர்வு
ADDED : நவ 27, 2024 09:22 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, பொள்ளாச்சி, வால்பாறை சட்டசபை தொகுதியில், முதன்முறை ஓட்டளிக்க, 6,275 பேர் தயாராகி உள்ளனர்.
2025 ஜன., 1ம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவக்கப்பட்டுள்ளது. இதற்காக, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில், 269 ஓட்டுச்சாவடிகள்; வால்பாறை சட்டசபை தொகுதியில், 68 ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய சிறப்பு முகாம் நடந்தது.
அதில், முதன் முறையாக ஓட்டளிக்க பொள்ளாச்சி தொகுதியில், 3,149 பேரும், வால்பாறையில் தொகுதியில், 3,126 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
குறிப்பாக, இரு தொகுதிகளிலும் சேர்த்து, 18 - 19 வயது வரை உள்ளவர்கள், 2,772 பேர், புதிய வாக்காளர்களாக இடம் பெற்றுள்ளனர். இதற்கு, கல்லுாரிகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வே காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து, தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது:
கல்லுாரிகளில் தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அப்போது, 18 வயது மாணவ, மாணவியரிடம் படிவம் 6, வழங்கி பூர்த்தி செய்யப்பட்டு பெறப்படுகிறது.
சிறப்பு முகாமின்போது, அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் 'அப்டேட்' செய்யப்படுகிறது.
அந்த வரிசையில் இளம் வாக்காளர்கள், முதல் முறையாக ஓட்டளிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நடப்பு கல்வியாண்டு கல்லுாரிகளில் சேர்ந்த மாணவ -மாணவியரை பட்டியலில் இணைத்தால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.
2026ல் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருப்பதால், 17 வயதானவர்களிடம் விண்ணப்பம் பெற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவர்களது பெயர்கள் பட்டியலில் இணையும்போது, தேர்தல் சமயத்தில், இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.