/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை ஒழிப்புக்கு விழிப்புணர்வு
/
போதை ஒழிப்புக்கு விழிப்புணர்வு
ADDED : ஆக 04, 2025 07:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பூசாரிப்பட்டி, பொள்ளாச்சி கலை கல்லுாரியில், போதைப்பொருள் தடுப்பு அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கல்வி சார் தாளாளர் சிவானிகிருத்திகா தலைமை, முதல்வர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
முன்னதாக, துறை ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார், வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக, பொள்ளாச்சி மது விலக்கு கோட்ட கள ஆய்வாளர் சிவக்குமார், மதர் இந்தியா டிரஸ்ட் அமைப்பு செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள்; சமூகத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விளக்கப்பட்டது. உதவி பேராசிரியர் குணப்பிரியன் நன்றி கூறினார்.