/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'உழவரை தேடி வேளாண்மை' விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
/
'உழவரை தேடி வேளாண்மை' விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
'உழவரை தேடி வேளாண்மை' விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
'உழவரை தேடி வேளாண்மை' விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
ADDED : ஜூன் 27, 2025 09:28 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, குருநல்லிபாளையத்தில் விவசாயிகளுக்கு 'உழவரை தேடி வேளாண்மை' திட்டம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
கிணத்துக்கடவு, குருநல்லிபாளையம் பொது சேவை மையத்தில் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்ந்துறை சார்பில், 'உழவரைத்தேடி வேளாண்மை' திட்டம் பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், குருநல்லிபாளையம் வி.ஏ.ஓ., ரவி, விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில், கிணத்துக்கடவு விற்பனை கூட கண்காணிப்பாளர் செல்வராஜ், ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் உள்ள திட்டங்கள், விளைபொருட்கள் இருப்பு வைக்கும் முறைகள், விபரங்கள் மற்றும் நன்மைகள் குறித்து பேசினார்.
தோட்டக்கலை துறை உதவி அலுவலர் மணிகண்டன், பயிர் சார்ந்த ஆலோசனைகள், நோய் தடுப்பு முறைகள் மற்றும் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் நன்மைகள் பற்றி பேசினார். வேளாண் பொறியியல் துறை அலுவலர் பிரியா, மானியத்தில் சோலார் டிரையர் அமைத்தல், பண்ணை குட்டை அமைத்தல் மற்றும் இதர திட்டங்கள், மானியத்தில் இயந்திரங்கள் வாங்கும் முறை குறித்து விரிவாக பேசினார். வேளாண் உதவி அலுவலர் உலகநாதன், வேளாண் திட்டங்களில் பயன்பெறும் முறைகள் மற்றும் தகுதிகள் குறித்து பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை, உதவி தோட்டக்கலை அலுவலர் சந்தோஷ் செய்திருந்தார்.