/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களுக்கு ராகிங் தடுப்பு விழிப்புணர்வு
/
மாணவர்களுக்கு ராகிங் தடுப்பு விழிப்புணர்வு
ADDED : ஜன 07, 2025 11:55 PM
கோவை; கோவை கொங்குநாடு நர்சிங் கல்லுாரியில், ராகிங் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட, தொண்டாமுத்துார் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் ராகிங் தடுப்பு மற்றும் போதை ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு உரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
கொங்குநாடு நர்சிங் கல்லுாரி மற்றும் கொங்குநாடு அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி மாணவர்கள், 60க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். கொங்குநாடு நர்சிங் கல்லுாரியின் தலைமை அறங்காவலர் மற்றும் கொங்குநாடு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜு, கொங்குநாடு நர்சிங் கல்லுாரியின் நிர்வாக அறங்காவலர் ஆர்த்தி மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.