/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண் குழந்தைகள் கல்வி பாதுகாப்புக்கு விழிப்புணர்வு
/
பெண் குழந்தைகள் கல்வி பாதுகாப்புக்கு விழிப்புணர்வு
பெண் குழந்தைகள் கல்வி பாதுகாப்புக்கு விழிப்புணர்வு
பெண் குழந்தைகள் கல்வி பாதுகாப்புக்கு விழிப்புணர்வு
ADDED : ஆக 07, 2025 10:59 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, நெகமம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில், 'ஆல் தி சில்ரன்' அறக்கட்டளை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
'பெண் குழந்தைகள் கல்வி மற்றும் பாதுகாப்பு' என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியை அறக்கட்டளை நிர்வாகி சம்பத்குமார் ஒருங்கிணைத்தார். பாதுகாப்பு அலுவலர் சேரன், பெண் குழந்தை கல்வியின் முக்கியத்துவம், பள்ளி இடைநிற்றலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினார்.
குறிப்பாக, இன்றைய காலத்தில், பெண் குழந்தையையும், ஆண் குழந்தையையும் சமுதாயத்தில் சமமாக சிறந்த முறையில் வளர்ப்பதும், சிறந்த கல்வி அளிப்பதும் பெற்றோரின் கடமை. ஆண், பெண் என, குழந்தைகளை பாகுபாடின்றி உணவு, கல்வி, விளையாட்டு, ஊட்டச்சத்து என அனைத்தையும் சமமாக அளிக்க வேண்டும்.
விண்வெளி ஆராய்ச்சி, மருத்துவம் என அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். பெண் குழந்தைக்கு கல்வி வழங்குவதால், அவர்கள் சமுதாயத்தில் முன்னேறி நாட்டிற்கு பெருமை சேர்க்க முடியும், என, தெரிவிக்கப்பட்டது.