/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர் பாதுகாப்பு குறித்து கல்லூரியில் விழிப்புணர்வு
/
மாணவர் பாதுகாப்பு குறித்து கல்லூரியில் விழிப்புணர்வு
மாணவர் பாதுகாப்பு குறித்து கல்லூரியில் விழிப்புணர்வு
மாணவர் பாதுகாப்பு குறித்து கல்லூரியில் விழிப்புணர்வு
ADDED : ஜன 29, 2025 10:51 PM

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு அருகே உள்ள பகவதிபாளையம், அக் ஷயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவர்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து.
கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி பங்கேற்று பேசினார். கல்லூரி இயக்குனர் ராஜசேகர், தலைமை நிர்வாக அதிகாரி கபிலன், துணை முதல்வர் நிர்மலா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் பேசியதாவது:
மாணவர்கள் அனைவரது மொபைல்போனிலும், தமிழக அரசின் 'எஸ்.ஓ.எஸ்' செயலி பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இது, ஆபத்து காலத்தில் உதவியாக இருக்கும்.
தற்போதைய காலகட்டத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அதை தவிர்க்க, வீட்டின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
மேலும், மாணவர்கள் சமூகவலைதளம் மற்றும் மதுப்பழக்கத்தில் அதிகளவு மூழ்கி கிடக்கின்றனர். சிறிய பிரச்னை என்றாலும் அதற்கு தீர்வு காண்பதில் தடுமாற்றம் அடைகின்றனர். இதைத் தவிர்த்து, மாணவர்கள் தங்கள் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.

