/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிதி மோசடி தற்காப்புக்கு கல்லுாரியில் விழிப்புணர்வு
/
நிதி மோசடி தற்காப்புக்கு கல்லுாரியில் விழிப்புணர்வு
நிதி மோசடி தற்காப்புக்கு கல்லுாரியில் விழிப்புணர்வு
நிதி மோசடி தற்காப்புக்கு கல்லுாரியில் விழிப்புணர்வு
ADDED : அக் 17, 2024 10:24 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இன்ஸ்டியூசன் இன்னோவேஷன் கவுன்சில் அமைப்பு மற்றும் வணிகவியல் துறை சார்பில் 'நிதி மோசடிகளில் தற்காத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கைகள்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கல்லுாரித் தாளாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். முன்னதாக, வணிகவியல் துறை முதன்மையர் சபரிநாதன் வரவேற்றார்.
ஜாய்ஸ் புரோக்கிங் நிறுவன துணைத் தலைவர் முகேஷ்குமார் பேசுகையில், ''இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் மோசடிகளும் பாதிப்புகளும் பெருகி வருகின்றன. அவற்றில் இருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
கல்லுாரியின் கல்வி சார் தாளாளர் சிவானிகிருத்திகா, முதல்வர் கண்ணன் உட்பட பலர் கலந்த கொண்டனர். உதவிப் பேராசிரியர் பூபதி நன்றி கூறினார்.