/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் விழிப்புணர்வு
/
அரசு சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் விழிப்புணர்வு
ADDED : அக் 29, 2024 09:10 PM
கோவை: கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி ரமேஷ், பாப்பநாயக்கன் பாளையம் அரசு சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில், ஆய்வு மேற்க்கொண்டார்.
தங்குமிடம், குளியலறை, கழிப்பறை, சமையற்கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார். கூர் நோக்கு இல்ல சிறுவர், சிறுமியர், மறுவாழ்விற்கான தொழிற்கல்வி, திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்து, அறிவுறுத்தல் வழங்கினார். அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் கிடைக்கிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்.
இதே போல, ஒண்டிப்புதுாரிலுள்ள அரசு மகளிர் காப்பகத்திலும் ஆய்வுமேற்கொண்டார். அங்கு தங்கியுள்ள பெண்களிடம், ஆள் கடத்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.