/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மார்ச் 2ல் விழிப்புணர்வு மராத்தான்
/
மார்ச் 2ல் விழிப்புணர்வு மராத்தான்
ADDED : பிப் 28, 2024 11:42 PM
கோவை : பெண்களுக்கு எதிரான வன்முறை, குடும்ப வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வரும் 2ல் கோவையில் மராத்தான் நடத்தப்படுகிறது.
சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் பொருட்டு, தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பாலினம் மற்றும் வயது பாகுபாடு இல்லாமல் அனைவரும் பங்கேற்கும் வகையில், மராத்தான் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
வரும், 2ம் தேதி காலை 6:00 மணிக்கு, கோவை நேரு ஸ்டேடியம் முன் மராத்தான் துவங்குகிறது. அனைத்து தரப்பினரும் பங்கேற்க, கலெக்டர் கிராந்திகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

