/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீயணைப்புத்துறை பணிகள் மக்களுக்கு விழிப்புணர்வு
/
தீயணைப்புத்துறை பணிகள் மக்களுக்கு விழிப்புணர்வு
ADDED : அக் 12, 2025 10:48 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் தீயணைப்புத்துறை பணிகள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொள்ளாச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில், தீயணைப்பு துறை பணிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.அதில், உதவி மாவட்ட அலுவலர் அழகர்சாமி, தீயணைப்புத்துறை பணிகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கமளித்தார்.
தீயணைப்புத்துறை நிலை அலுவலர் கணபதி மற்றும் வீரர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். அதில், காஸ் அடுப்பில், திடீரென தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைக்க வேண்டும் என விளக்கப்பட்டது.
உதவி மாவட்ட அலுவலர் கூறியதாவது:
'வாங்க கற்றுக்கொள்வோம்' என்ற தலைப்பில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில், பாதுகாப்பு அடிப்படை பயிற்சி அளிக்கப்படுகிறது. அதில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அதில், பொதுமக்களை அழைத்து தீயணைப்புத்துறை பணிகள் குறித்து விளக்கமளித்தனர். தீ விபத்து ஏற்படும் போது, எவ்வாறு தீயை கட்டுப்படுத்த வேண்டும். உடமைகள், உயிர்களை பாதுகாப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.