/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆயிரம் மகா கனி மரக்கன்றுகள் நடவு 'வனத்துக்குள் திருப்பூரில்' பணிகள் தீவிரம்
/
ஆயிரம் மகா கனி மரக்கன்றுகள் நடவு 'வனத்துக்குள் திருப்பூரில்' பணிகள் தீவிரம்
ஆயிரம் மகா கனி மரக்கன்றுகள் நடவு 'வனத்துக்குள் திருப்பூரில்' பணிகள் தீவிரம்
ஆயிரம் மகா கனி மரக்கன்றுகள் நடவு 'வனத்துக்குள் திருப்பூரில்' பணிகள் தீவிரம்
ADDED : அக் 12, 2025 10:47 PM

உடுமலை:வனத்துக்குள் திருப்பூர் -11 திட்டத்தின் கீழ், மாவட்டம் முழுவதும், 2 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்ட நிலையில், உடுமலை பகுதிகளில், 91 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், வனத்துக்குள் திருப்பூர் திட்டம், செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த, 10 ஆண்டுகளில், 22 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்ட நிலையில், நடப்பாண்டு, மூன்று லட்சம் இலக்குடன் பணிகள் துவங்கின. மாவட்டம் முழுவதும், 2 லட்சத்து, 4 ஆயிரத்து 88 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
உடுமலை பகுதிகளில், விவசாயிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆர்வம் காரணமாக, அதிகளவு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.
நேற்று வரை, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், 91 ஆயிரத்து, 450 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில், பருவ மழை துவங்கியுள்ள நிலையில், பதிவுகளும் அதிகரித்துள்ளது.இத்திட்டத்தின் கீழ், உடுமலை, ஆனைமலை ரோடு, சாளையூரை சேர்ந்த, விவசாயி மாரிமுத்துக்கு சொந்தமான விவசாய நிலத்தில், 100 மகா கனி, 50 புங்கன் என, 150 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல், மடத்துக்குளம், பாப்பான்குளத்தை சேர்ந்த விவசாயி கற்பக வள்ளிக்கு சொந்தமான நிலத்தில், 1,800 பாக்கு மரக்கன்றுகள் நடவு செய்யபட்டுள்ளது.
குடிமங்கலம் ஒன்றியம், இலுப்பநகரத்தை சேர்ந்த விவசாயி ஜெயப்பிரகாஷ்க்கு, சொந்தமான நிலத்தில், ஆயிரம் மகா கனி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
குறைந்த நீர்தேவை, குறைந்த பராமரிப்பு செலவு என மரச்சாகுபடி திட்டமாகவும், பசுமை அதிகரிக்கும் வகையிலும், விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் இலவசமாக நடவு செய்து தரப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், தொழிற்சாலை, கோழிப்பண்ணை வளாகங்கள், பள்ளி, கல்லுாரி, கோவில் வளாகங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க விருப்பம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்தனர்.