/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை பொருளுக்கு எதிராக மாணவர்கள் விழிப்புணர்வு
/
போதை பொருளுக்கு எதிராக மாணவர்கள் விழிப்புணர்வு
ADDED : ஆக 11, 2025 11:15 PM

கோவை; நீலாம்பூரில் உள்ள கதிர் கலை அறிவியல் கல்லுாரியில், 1500 மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி மைதானத்தில், 'நோ டிரக்' என்ற வாசகத்தை 1,500 மாணவர்கள் இணைந்து வடிவமைத்தனர். ஒரு வாரமாக, போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு தொடர்பாக, சமூக ஊடகங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான போஸ்டர்களை, கதிர் கல்லுாரி மாணவர்கள் பிரசுரித்துள்ளனர்.
'போதை பொருட்களை நாங்களும் பயன்படுத்த மாட்டோம்; மற்றவர்களையும் பயன்படுத்த விட மாட்டோம்' என்ற ஹாஷ்டேக் ஒன்றையும் துவக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளதாக, கல்லுாரியின் முதல்வர் கற்பகம் கூறினார்.
இந் நிகழ்வில், கதிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கதிர், செயலாளர் லாவண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.