/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்தில் காயமடைந்தோருக்கு முதலுதவி குறித்து விழிப்புணர்வு: மருத்துவமனையில் செயல்விளக்கம்

ADDED : அக் 15, 2025 11:38 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், உலக விபத்து காய தினம், '108' ஆம்புலன்ஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா தலைமை வகித்தார்.
பொதுமக்கள் எப்பொழுதெல்லாம், '108' ஆம்புலன்ஸ்சை அழைக்க வேண்டும், '108'-ல் முதலுதவி என்ன செய்வர்? எப்படி மருத்துவமனைக்கு அழைத்து செல்வர், தலைக்காயம் ஏற்பட்டவுடன் நினைவு இல்லாத போது அவருக்கு தண்ணீர் கொடுக்க கூடாது, தண்டுவட கழுத்து எலும்பில் அடிபட்டி இருந்தால் அவரை கழுத்து அசையாமல் வைக்க வேண்டும். முதலுதவி என்னென்ன செய்ய வேண்டும் என்று அனைவருக்கும் விளக்கி கூறினர்.
ஒருவருக்கு நெஞ்சுவலி அல்லது நினைவிழந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்று செயல்முறை வாயிலாக விளக்கி கூறப்பட்டது.
மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள், பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களிடம், ஒருவர் திடீரென்று மயங்கி விட்டால், அல்லது விபத்தில் காயமடைந்தால் - அவர்களுக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும் என விளக்கப்பட்டது.
மருத்துவமனைக்கு அவர்கள் வந்ததும், மருத்துவ கருவிகள் வாயிலாக அவர்களை சுய நினைவுக்கு கொண்டு வருதல், இதயத்துடிப்பு திரும்பிக் கொண்டு வருதல், நெஞ்சுவலி இருந்தால் சிகிச்சை முறை குறித்து விளக்கப்பட்டது.
அறுவை சிகிச்சை பகுதி தலைவர் டாக்டர் கார்த்திகேயன், பொது மருத்துவ துறை தலைவர் -டாக்டர் வனஜா மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.