/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போஸ்ட் கார்டில் விழிப்புணர்வு
/
போஸ்ட் கார்டில் விழிப்புணர்வு
ADDED : ஜன 24, 2026 05:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, கல்லூரி மாணவர்களிடையே அஞ்சல் அட்டை வாயிலாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோவை கலெக்டர் பவன்குமார், விழிப்புணர்வு நிகழ்வை துவக்கி வைத்தார்.
இதில், முதல்முறை வாக்களிக்க உள்ள மாணவர்கள், நேர்மையான முறையில் வாக்களிப்பது குறித்து போஸ்ட் கார்டில் கடிதம் எழுதினர். தொடர்ந்து, அனைவரும் வாக்காளர் தின உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் எழில், தேர்தல் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

