/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மஞ்சப்பை பயன்பாடு பள்ளியில் விழிப்புணர்வு
/
மஞ்சப்பை பயன்பாடு பள்ளியில் விழிப்புணர்வு
ADDED : ஏப் 14, 2025 10:07 PM

ஆனைமலை, ;ஆனைமலை அருகே அரசுப்பள்ளியில், மஞ்சப்பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஆனைமலை அருகே பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், தேசியபசுமைப்படை சார்பில், மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார்.
வேண்டும், வேண்டும் துணிப்பை, வேண்டாம், வேண்டாம் பிளாஸ்டிக் பை, மீண்டும், மீண்டும் மஞ்சப்பை என்ற வாசகங்களுடன் கூடிய பதாகைகளை மாணவர்கள், கையில் ஏந்தியபடி பெத்தநாயக்கனுாரில் உள்ள அனைத்து வீதிகளிலும் முழக்கங்களை கூறியபடிச் சென்றனர்.
பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து துண்டு பிரசுரங்களை அனைத்து வீடுகளுக்கும் கொடுத்தனர்.
தமிழ் ஆசிரியர் பாலமுருகன் கூறுகையில், ''மரங்களுக்கு மாற்று என கொண்டாடப்பட்ட நிகழ்வு, பொருட்கள் இன்று இந்த மண்ணையே மலடாக்கி பூமியை பாழ்படுத்தி கொண்டு உள்ளது. இதை வளரும் இளைய சமுதாயத்திடம் கொண்டு சென்றால் தான் மாபெரும் மாற்றம் உண்டாகும். இவர்கள் தான் மாற்றத்தை உருவாக்கும் திறன் பெற்றவர். எனவே, தான் இது போன்று பூமியை பாதுகாக்கும் நிகழ்வுகள், எங்களது பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது,'' என்றார்.