ADDED : மார் 11, 2024 01:55 AM
அ நிறம் | அளவு
கோவை;கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் அரசின் சாதனை மற்றும் நலத்திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி நேற்று துவங்கியது. இக்கண்காட்சியை, வீட்டுவசதி நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி திறந்துவைத்தார்.
இக்கண்காட்சி காலை, 9:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை ஏழு நாட்கள் நடக்கிறது. இதில், அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மகளிர் திட்டம் சார்பில் சுய உதவிக்குழு பெண்கள் தயாரித்த பொருட்களுக்கான விற்பனை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளன. பொது சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
புகைப்பட கண்காட்சி திறப்பு விழாவில், கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி மேயர் கல்பனா, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
