/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்விபத்தை தவிர்க்க விழிப்புணர்வு போஸ்டர்
/
மின்விபத்தை தவிர்க்க விழிப்புணர்வு போஸ்டர்
ADDED : அக் 29, 2025 12:05 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் காணப்படுகிறது. பருவமழையின் தாக்கம் காரணமாக, பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், மின் விபத்துக்களை தவிர்க்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.
அந்த வரிசையில், 'மழை நேரங்களில் குழந்தைகளிடம் சொல்லுங்கள்' என்ற தலைப்பில், படங்களுடன் கூடிய விழிப்புணர்வு போஸ்டரை, மின் வாரிய அதிகாரிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அதில், பள்ளியில், பொது இடங்களில் உள்ள மின் கம்பிகள் மற்றும் சர்வீஸ் ஒயர்கள் அறுந்து கிடந்தால் அதனை தொடவோ, மிதிக்கவோ, கையால் பிடிக்கவோ கூடாது. விளையாடும் போது பந்து, பட்டம் உள்பட பொருட்கள் மின்மாற்றி, மின் கம்பம், ஒயர்களில் மாட்டிக் கொள்ளும் போது கை, கம்பி, குச்சியால் எடுக்க முயற்சி செய்யக் கூடாது. மின்மாற்றி, கம்பம், இழுவை கம்பி அருகில் சிறுநீர் கழிக்கக் கூடாது. வீடுகள், பள்ளிகள், பொது இடங்களில் ஈரம் நிறைந்த கைகளால் சுவிட்ச்களை இயக்கக் கூடாது.
பஸ் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்தால், மின்கம்பிகளை தொடுவதற்கு வாய்ப்புள்ளது. அந்த தவறை செய்ய வேண்டாம். மழை காலங்களில் இடி, மின்னலின் போது மரத்தின் அடியில், மின்மாற்றி, மின் கம்பங்கள் அருகில் நிற்கக் கூடாது உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

