/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சி கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பொள்ளாச்சி கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜன 19, 2024 11:37 PM
பொள்ளாச்சி;பூசாரிப்பட்டியில் உள்ள, பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வணிகம், தொழில்நுட்பத்துறை மற்றும் வணிகவியல் துறை சார்பில், 'எதிர்காலத்திற்கான வேலை வாய்ப்புத்திறன்கள்' என்ற தலைப்பில், மாணவர்களுக்கு வழிகாட்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி தாளாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். வணிகம் மற்றும் தொழில்நுட்பத்துறை தலைவர் ஸ்ரீதேவி வரவேற்றார்.
கோவை நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மேலாண்மையியல் துறை உதவி பேராசிரியர் யசோதா பேசுகையில், ''மாணவர்கள் எதிர்கால உலகின் நவீன வளர்ச்சிக்கு ஏற்ப, தங்கள் வேலைவாய்ப்பு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதுவே, வெற்றி அடைவதற்கான வழியாகும்' என்றார்.
கல்லுாரி முதல்வர் கண்ணன், வணிகவியல் துறை முதன்மையர் சபரிநாதன் பேசினர். வணிகம் மற்றும் மின்னணு வணிகவியல் துறை தலைவர் சிவசங்கரி நன்றி கூறினார்.