/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜன 19, 2024 04:10 AM
உடுமலை : உடுமலையில், போக்குவரத்து விதிகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், வாகன ஓட்டுநர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உடுமலை நகரில், சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, போக்குவரத்து போலீசார் மற்றும் 'எவர்ரெனீவ் எனர்ஜி' தனியார் நிறுவனம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அவ்வகையில், நகரின் முக்கிய வழித்தடங்களில், வாகன ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குறிப்பாக, சிக்னல் விதிகளை பின்பற்ற வேண்டும், டூ வீலர் ஓட்டுவோர் ெஹல்மெட் அணிய வேண்டும். கார் ஓட்டுநர் 'சீட் பெல்ட்' அணிய வேண்டும் என, போக்குவரத்து விதிகள் குறித்து விளக்கப்பட்டது.
விதிமுறைகளை வாகன ஓட்டுநர்கள் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். தொடர்ந்து, போக்குவரத்து விதிமுறைகளை உள்ளடக்கிய துண்டு பிரசுரங்கள், அவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட நிலையில், அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

