/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புகையிலை ஒழிப்புக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
புகையிலை ஒழிப்புக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூன் 04, 2025 12:24 AM

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி, பிரஜாபிதா பிரம்ம குமாரி அமைப்பு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில், விழிப்புணர்வு நாடகம் மற்றும் பட விளக்க கண்காட்சி நடந்தது.
டாக்டர் ஜோய்சேகர், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மது, புகை, போதை ஆகியவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்து நடித்து காட்டினார். மேலும், சிகரெட், மது, போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து, துாய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் விளக்கிப் பேசினர். இதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.