/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேங்க் ஆப் இந்தியா சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பேங்க் ஆப் இந்தியா சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பேங்க் ஆப் இந்தியா சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பேங்க் ஆப் இந்தியா சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : செப் 26, 2025 05:51 AM

கோவை; பேங்க் ஆப் இந்தியாவின் கோவை மண்டல அலுவலகம் சார்பில், கண்காணிப்பு வாரத்தை முன்னிட்டு ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில், மண்டலத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமப்புற மற்றும் புறநகர் கிளைகளின் சார்பில், கிராம ஊராட்சிப் பகுதிகளில் கண்காணிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிநடந்தது.
வங்கியின் கோவை மண்டல மேலாளார் ரஞ்சித் குமார், துணை மண்டல மேலாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோரின் வழிகாட்டுதலின்பேரில், கிராம சபை கூட்டங்களை நடத்தி பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நெறிமுறைகளின் தேவைகள், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொது நிர்வாகம், சமூக முன்னேற்றத்தில், நாட்டின் பொருளாதாரத்தில் ஊழலில் தாக்கம், ஊழல் புகார்களை தெரிவிக்க பொதுமக்கள் செய்ய வேண்டியது குறித்து இக்கூட்டங்களில் விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், 'சட்டத்தின் வழி நடப்போம் லஞ்சம் கொடுக்கவோ, வாங்கவோ மாட்டோம்' என உறுதிமொழி ஏற்றனர். 'கண்ணில் படும் ஊழல் நிகழ்வுகளை தொடர்புடைய அமைப்புகளிடம் தெரிவிப்போம்' என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.