/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜன 25, 2025 11:02 PM
கோவை: ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் ஊர்வலம், கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், கோவையில் நேற்று நடத்தப்பட்டது.
ஊர்வலத்தை, உக்கடம் பஸ் ஸ்டாண்ட் அருகே, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கினார். உக்கடம் பெரிய குளத்தின் கரையில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. இந்துஸ்தான் மற்றும் கிருஷ்ணா கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (தெற்கு) பியூலா, துணை மேயர் வெற்றிச்செல்வன், சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன், உதவி நகர் நல அலுவலர் பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

