ADDED : செப் 08, 2026 09:53 PM
அ நிறம் | அளவு
கோவை: கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், கொடிசியா, தொழிலாளர் ஈட்டுறுதி கழகமும் (இ.எஸ்.ஐ.) இணைந்து, புதிய தொழிலாளர் நல விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை நேற்று நடத்தின.
கொடிசியா தலைவர் ரங்கசாமி வரவேற்றார். இ.எஸ்.ஐ.துணை இயக்குனர் கார்த்திகேயன், “ஏற்கனவே இருந்த ஒன்பது தொழிலாளர் நல சட்டங்கள் சமுக பாதுகாப்பு சட்டம் 2020ன் கீழ் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை அமல்படுத்த, தொழில் நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும். புதிய விதிமுறைகளால் தொழிலாளர்களுக்கு நன்மையும், சமுதாய பாதுகாப்பும் கிடைக்கும்,” என்றார்.
