ADDED : செப் 08, 2026 09:45 PM
அ நிறம் | அளவு
பீளமேடு-: பீளமேடு- விளாங்குறிச்சி ரோடு, 6-வது குறுக்கு தெருவிலுள்ள கருணை மனமகிழ் மன்றம் ஆலங்குடி என்ற எப்.எல்.2, மது பாரில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. தகராறில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. சம்பந்தப்பட்ட பாரில் உறுப்பினர் அல்லாத மற்ற நபர்களுக்கு மது விற்பனை செய்து, விதிமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனால் அந்த பாருக்கு மதுவிலக்கு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
