/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு விழிப்புணர்வு இருசக்கர வாகனத்தில் பேரணி
/
100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு விழிப்புணர்வு இருசக்கர வாகனத்தில் பேரணி
100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு விழிப்புணர்வு இருசக்கர வாகனத்தில் பேரணி
100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு விழிப்புணர்வு இருசக்கர வாகனத்தில் பேரணி
ADDED : மார் 20, 2024 12:25 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், ஓட்டு அளிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி நடந்தது.
பொள்ளாச்சி லோக்சபா தேர்தல் வரும் ஏப்., 19ம் தேதி நடக்கிறது. இதையடுத்து இன்று, 20ம் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் நடக்கிறது.லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்திடும் வகையில் பொதுமக்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகம் முன் பிளக்ஸ் வைத்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. ஓட்டு அளிப்பதன் அவசியம் குறித்து விளக்கும் வகையில், விழிப்புணர்வு 'செல்பி பாயின்ட்' வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அரசுப்பணியாளர்கள் பங்கேற்ற இருசக்கரவாகன விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் பேரணியை, தேர்தல் நடத்தும் அலுவலர் ஷர்மிளா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யா ஆகியோர் துவக்கி வைத்தனர். தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சரவணன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
பேரணி, பாலக்காடு ரோடு நகராட்சி அலுவலகம், பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை, கோவை ரோடு, மகாலிங்கபுரம் ரவுண்டானா, பல்லடம் ரோட்டில் பைவ் கார்னர், தேர்நிலையம், அரசு மருத்துவமனை, தபால் அலுவலகம் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதில், ஓட்டு அளிப்பதன் அவசியம், ஜனநாயக கடமையாற்ற வேண்டும், 100 சதவீத ஓட்டுப்பதிவாக வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வால்பாறை
வால்பாறை தொகுதியில், வாக்காளர் உறுதி மொழி எடுத்தல் மற்றும் கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடந்தது. ஆனைமலை தாலுகா அலுவலகம் முன் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது.
இதை தாசில்தார்கள் சிவக்குமார், வாசுதேவன் துவக்கி வைத்தனர். தொடர்ந்து, அதிகாரிகள், பொதுமக்கள் கையெழுத்திட்டனர். தேர்தல் பிரிவு துணை தாசில்தார் செந்தில்குமார், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

