UPDATED : நவ 22, 2026 05:21 PM
ADDED : நவ 22, 2026 05:17 PM

அ நிறம் | அளவு
ஆனைமலை: ஆனைமலை அருகே, பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில், மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பள்ளியில் நடந்த கூட்டத்துக்கு தலைமையாசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வனிதா, விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
பறை இசை முழங்க துவங்கிய பேரணி, பெத்தநாயக்கனுார் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாணவர்கள், ‘மழைநீரை சேமிப்போம், மழைநீர் உயிர் நீர், துளி, துளி மழைத்துளி, ஒவ்வொரு துளியும் உயிர் துளி என கோஷமிட்டபடியே சென்றனர். மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
